ஹாலிவுட்டில் அறிமுகமாகும் மதராசி பட வில்லன்... கதாபாத்திர போஸ்டர் வெளியீடு...
பாலிவுட் நடிகர்களில் ஒருவர் வித்யூத் ஜமால். 2011 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான ’போர்ஸ்’ (Force) படத்தின் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் வித்யூத், களரி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் இவர் விஜயின் ’துப்பாக்கி’, சூர்யாவின் ’அஞ்சான்’, சிவகார்த்திகேயனின் ’மதராசி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் வித்யூத் ஜமால், “ஸ்டிரீட் ஃபைட்டர்” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகிறார். இன்று நடைபெற்ற கேம் விருதுகள் 2025 விழாவில் படத்தின் டைடில் டீசர் வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன் படி வித்யூத் ஜமாலின் கதாபத்திர போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பெயர் ’தல்சிம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் “அகுமா” எனும் கதாபாத்திரத்திலும் அக்வாமேன் புகழ் ஜேசன் மோமோவா, ”பிளாங்கா” எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.