For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!

மடப்புரம் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதாவின் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
09:53 AM Aug 29, 2025 IST | Web Editor
மடப்புரம் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதாவின் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு
Advertisement

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா ,ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Advertisement

இதையடுத்து ஜூலை 14 ஆம் தேதி முதல்  சிபிஐ அதிகாரிகள் நிகிதா, அஜித்குமாரின் சகோதரர் நவீன், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கில்  நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் குறித்து இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து நீதிபதிகள்  உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் உரிய நேரத்தில் வழக்கு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னதாக உயர் நீதிமன்ற அமர்வு அளித்த உத்தரவின் அடிப்படையில் நிகிதா நகை காணாமல் போனது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நிகிதா ஜூன் 27ஆம் தேதி அன்று மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு காரில் சென்ற போது காரில் இருந்த நகை காணாமல் போனதாக அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் unknown person என குறிப்பிடப்பட்டு  பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜித் குமார் கொலை வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிகிதா அளித்த புகாரின் கீழ் நகை காணாமல் போனது தொடர்பாக சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தொடர்பாக நிகிதா மற்றும் அவரது தாயார் மற்றும் கொலையான காவலாளி அஜித் குமாருடன் பணியாற்றிய பணியாளர்கள் கோவில் அதிகாரிகள் மற்றும் திருப்புவனம் காவல்துறையினர் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இந்த விசாரணையில் தான் உண்மையில் நகை காணாமல் போனதா? நகையைத் திருடியது யார்? என்பது குறித்தான தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags :
Advertisement