தெலுங்கில் ரிலீசாகும் மதகஜராஜா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால் . இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான படம் மதகஜராஜா. இந்த படத்தை சுந்தர்சி இயக்கியிருந்தார். இதில் விஷால் உடன் சந்தானம், வரலஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டு இடைவேளைக்கு பிறகு கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள் பெரிதாக கவனம் பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றஇப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.‘
தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை சத்ய கிருஷ்ணன் புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கு ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது.