திருவனந்தபுரம் உயிரியில் பூங்காவில் இருந்து மக்காவ் கிளி மாயம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் உயிரியில் பூங்காவில் இருந்து ஒரு மக்காவ் கிளி பறந்து சென்றது. வெள்ளிக்கிழமை (மே.2) மதியம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட மக்காவ் கிளிக்கு உணவு வைக்க முயன்றபோது அதன் கூண்டிலிருந்து பறந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த மக்கா பறவை ஒரு ஜோடி ரூ.4 லட்சம் என மதிப்பிடப்படுகிறது.
குறிப்பிட்ட வயதை எட்டியிருந்தாலும், அதற்கு தானாக சாப்பிடும் பழக்கமில்லை என்பதால், மீண்டும் பூங்காவிற்கே திரும்பிவிடும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பராமரிப்பாளர்களின் அலட்சியம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தப் பறவையைக் கண்டாலோ அல்லது அது இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தாலோ உடனடியாக 0471-2316275 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அக்டோபர் 2024 இல், லண்டன் உயிரியல் பூங்காவில் இருந்தும் இரண்டு மக்காவ் கிளிகள் தப்பின.
ஆனால் பூங்கா பராமரிப்பாளர்கள் அவைகளை கண்டபோது தானாக அவர்களிடம் வந்து அமர்ந்தது. அதுபோல இந்த மக்காவ் பறவையும் வரும் எனவும் பூங்கா அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.