Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எம்.ஃபில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல, அதில் மாணவர்கள் சேர வேண்டாம்" - யுஜிசி அறிவிப்பு

07:43 AM Dec 28, 2023 IST | Web Editor
Advertisement

'எம்ஃபில் (முதுநிலை தத்துவம்) அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல; அதில் மாணவர் சேர வேண்டாம்' என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் எம்ஃபில் முடித்திருப்பது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக முன்னர் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  இதனை மாற்றிய யுஜிசி, முதுநிலை பட்டப்படிப்புடன் 'நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது 'செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு' தேர்வுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. (முனைவர் பட்டம்) முடித்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.


இதனைத் தொடர்ந்து எம்ஃபில் படிப்புகளை நிறுத்துமாறு பல்கலைக்கழகங்கள யுஜிசி கேட்டுக்கொண்டது. ஆனால், அதன் பிறகும் எம்ஃபில் படிப்பை சில பல்கலைகழகங்கள் நடத்தி வருகின்றன.  இந்த நிலையில், 'எம்ஃபில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல' என, யுஜிசி தறபோது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது தெரிவித்துள்ளதாவது..

சில பல்கலைக்கழகங்கள் எம்ஃபில் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு புதிதாக விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளன. எம்ஃபில் பட்டப் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல என்பதை இந்த பல்கலைக்கழகங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயர் கல்வி நிறுவனங்கள் எம்ஃபில் படிப்பை நடத்தக் கூடாது என்பது, 'பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான யுஜிசியின் குறைந்தபட்ச தரம் மற்றும் நடைமுறை 2022 வழிகாட்டுதல் எண்.14-இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Assistant ProffessorM.PhilUGCunion govt
Advertisement
Next Article