For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மணீந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றுள்ளார்.
06:58 PM Jul 21, 2025 IST | Web Editor
சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மணீந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம் எம்  ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார்
Advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மணீந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா இன்று பதவியேற்றார். ஏற்கனவே சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தான் மாநில தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மோகன் ஸ்ரீவாஸ்தவா சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

இதற்கான விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர் என். முருகானந்தம் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மோகன் ஸ்ரீவத்சவாவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள்கள், வழக்கறிஞர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் இந்த விழாவில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை அவருக்கு ஏற்பட்ட  திடீர் உடல் நலக்கோளாரால் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சத்தீஷ்கர் மநிலம் பிலஸ்பூரை சேர்ந்தவர் ஆவார். தற்போது 61 வயதுடைய  இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் அவர்,  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநி லஉயர்நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

Tags :
Advertisement