For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Meiyazhagan படத்தின் 'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரல்!

03:03 PM Sep 15, 2024 IST | Web Editor
 meiyazhagan படத்தின்  வெறி  பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரல்
Advertisement

மெய்யழகன் படத்தின் 'வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

96 படத்தை இயக்கி தேசிய அளவில் கவனம் ஈர்த்த பிரேம் குமார் அடுத்ததாக கார்த்தி, அர்விந்த்சாமி ஆகியோருடன் பணியாற்றியுள்ள படம் மெய்யழகன். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோவையில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் வெறி என்று தலைப்பிடப்பட்டுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.வெறி பாடலில், தமிழ்நாட்டில் நடந்த பிரதான சம்பவங்களான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் தலைவர்களான அண்ணா, பெரியார் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பிடித்துள்ளன. மெய்யழகன் படத்தை நடிகர் சூர்யாவும் அவரின் மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement