Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லியான் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!

08:54 AM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Advertisement

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியில் இவர் வெற்றி பெறுவது 10ஆவது முறையாகும். இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் அவர் 3-1 என்ற கணக்கில் உள்ளூர் போட்டியாளரான ஜேமி சான்டோஸ் லடாசாவை வீழ்த்தினார்.

மேலும், 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1996-இல் இந்தப் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 4 போ் கொண்ட இந்தப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த், சான்டோஸுடன், மற்றொரு இந்தியரான அா்ஜுன் எரிகைசி, பல்கேரியாவின் வாசெலின் டோபாலோவ் ஆகியோரும் விளையாடினர்.

இதையும் படியுங்கள் : ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் – கடலூரில் அகழாய்வின்போது கண்டெடுப்பு!

ஒவ்வொரு சுற்றும், தலா 20 நிமிடங்களுடன் 4 ஆட்டங்களைக் கொண்டிருந்தது. இதில் அரையிறுதிச்சுற்றில், விஸ்வநாதன் ஆனந்த் - டபோலாவையும் (2.5-1.5), சான்டோஸ் - அா்ஜுனையும் (2.5-1.5) வீழ்த்தினா்.

Tags :
Lyon Masters ChessSpaintitletournamentViswanathan AnandWins
Advertisement
Next Article