For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு!

07:39 PM Apr 07, 2024 IST | Web Editor
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு
Advertisement

ஐபிஎல் தொடரின் 21வது போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில்  தொடங்கி நடைபெற்று வருகின்றதுஇதில் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றதுஇந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸும் மோதின. இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. குஜராத் அணி பௌலிங் செய்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளதுஇதனால் நான்கு புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளதுஅதேபோல் லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் லக்னோ அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

Tags :
Advertisement