204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ... 2வது வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்று வரும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது லக்னோ அணி. இதன்மூலம் மும்பை அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன்களும், எய்டென் மார்க்ரம் 53 ரன்களும் எடுத்தனர்.
மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளும், விக்னேஷ் புதூர், ட்ரெண்ட் போல்ட் , அஷ்வணி குமார் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்திக் பாண்ட்யா.
இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது வெற்றியை எந்த அணி பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடாதது குறிப்பிடத்தக்கது.