For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#LubberPandhu திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

09:16 PM Sep 25, 2024 IST | Web Editor
 lubberpandhu திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி
Advertisement

லப்பர் பந்து படத்தை பற்றி மக்கள் கூறியது தான் படத்தின் வெற்றி என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார்.

Advertisement

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து,’லப்பர் பந்து’ திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, இசையமைப்பாளர் சான் ரோல்டன், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், பால சரவணன், டி.எஸ்.கே, காளி வெங்கட், பாலசரவணன் மற்றும் நடிகைகள் சஞ்சன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் : MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!

நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுவாசிகா கூறியதாவது :

"லப்பர் பந்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இணைந்துள்ளேன். அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களை நடிக்க உள்ளேன். குக்கூ திரைப்படத்தில் நான் நடிக்க இருந்தேன், ஆனால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. இந்த திரைப்படத்தின் மூலம் புது வாழ்க்கையை நான் தொடங்கியுள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியதாவது :

"இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மக்கள் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்று
கூறியது தான் இந்த திரைப்படத்தின் வெற்றி. இயக்குனர் தமிழும், நானும் ஒரு அண்ணன் தம்பி போல் தான் பழகியுள்ளோம். எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும் நானும் கிரிக்கெட் குறித்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement