#LSGvsRCB : பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையிலான 15வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , கே.எல்.ராகுல் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து படிக்கல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் டி காக் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். டி காக் 56 பந்துகளில் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 181 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது லக்னோ அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.