LSGvsPBKS | டாஸ் வென்ற லக்னோ - பஞ்சாப் அணி பேட்டிங்!
ஐபிஎல் தொடரில் இன்று(மே.04) ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் அணி இதுவரை 10 போட்டிகள் விளையாடி 6-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே போல் லக்னோ அணி 10 போட்டிகள் விளையாடி 5-ல் வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
இந்த சூழலில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி பிளேயிங் லெவன்:
பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஸ், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
லக்னோ அணி பிளேயிங் லெவன்:
ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர் , அப்துல் சமத், ஆகாஷ் சிங், அவேஷ் கான், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி.