Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

LSGvsDC | நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷின் அதிரடி ஆட்டம் - டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்கு!

டெல்லி அணியிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 210 ரன்களை லக்னோ அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:47 PM Mar 24, 2025 IST | Web Editor
Advertisement

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று(மார்ச். 24) டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. லக்னோ அணி சார்பில் ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், திக்வேஷ் சிங் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

அதே போல் டெல்லி அணி சார்பில், ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் விளையாடுகின்றனர்.

முதல் இன்னிஸில் லக்னோ அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும் மிட்செல் மார்ஷ் 72 ரன்களையும் எடுத்தனர். கேப்டன்  ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். அதே போல் டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ்  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 210 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி  பேட்டிங் செய்து வருகிறது.

Tags :
AxarPatelCricketIPL2025LSGvsDCRishabhPant
Advertisement
Next Article