For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

LSG vs GT | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் குஜராத் அணி இன்று மோதல்!

07:08 AM Apr 07, 2024 IST | Web Editor
lsg vs gt   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் குஜராத் அணி இன்று மோதல்
Advertisement

லக்னோ அணியில் இந்த சீசனில் பிரமிப்பை ஏற்படுத்தும் புதிய பவுலராக மயங்க் யாதவ் உருவெடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 156.7கிமீ வேகத்தில் பந்து வீசி, ஐபிஎல் தொடர்களிலேயே அதி வேகமாக பந்து வீசிய பவுலராக உருவெடுத்துள்ளார்.

அத்துடன் ஆர்சிபி அணிக்கு எதிராக அற்புதமாக பவுலிங் செய்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்ற மயங்க் யாதவ், ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது என்ற சாதனையும் புரிந்துள்ளார். எனவே அவரது வேகம், குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ பேட்டிங்கை பொறுத்தவரை குவன்டைன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். அதேபோல் மார்கஸ் ஸ்டோய்னிஸும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், நிக்கோலஸ் பூரான் அதிரடி காட்டி வருகிறார். இவர்கள் மூவரை நம்பி மட்டுமே லக்னோவின் பேட்டிங் வரிசை உள்ளது.

கேப்டன் கேஎல் ராகுல், ஆவேஷ் கானுக்கு பதிலாக டிரேடிங் செய்யப்பட்ட தேவ்தத் படிக்கல் இன்னும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல் இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனியும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். எனவே இவர்கள் மூவரும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் லக்னோ அணியின் பேட்டிங் வலிமை பெறும்.

கடந்த போட்டியில் பிட்னஸ் காரணமாக டேவிட் மில்லர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கேன் வில்லியம்சன் வழக்கமான தனது பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

அதன்படி சுப்மன் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன் என குஜராத் டாப் ஆர்டர் நல்ல நிலையிலேயே உள்ளது. மிடில் ஆர்டரில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வரும் விஜய் சங்கர், அஸ்மதுல்லா உமர்சாய் தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

2022 சீசனில் சேர்க்கப்பட்ட புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் உள்ளது. இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட 4 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் வென்றுள்ளது. எனவே லக்னோ அணி, குஜராத்துக்கு எதிராக இன்று முதல் வெற்றியை பெற போராடும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கிய ஆயுதமாக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பயன்படுத்தப்படுவார் என தெரிகிறது.

Tags :
Advertisement