Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிலிண்டர் ரூ.500...பெட்ரோல் ரூ.75... டீசல் ரூ.50... திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை...

11:03 AM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளிலும், விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப் 5-ம் தேதி முதல் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். இந்த தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் முதலமைச்சர் பேசியதாவது: 

“திமுகவின் தேர்தல் அறிக்கை அல்ல;  தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை; பாசிச பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சி தொடருவது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டின் கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவை அனைத்து வழிகளிலும் பாழ்படுத்தியது பாஜக. மாநிலங்களை அரவணைக்கிற ஆட்சி. சமத்துவம், சமர்தமம் கொண்ட ஆட்சி அமைய வேண்டும்.

64 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை சிறப்பாக தயாரித்த கனிமொழிக்கும் அவரது குழுவினருக்கும் திமுக தலைமை கழகத்தின் சார்பில் நன்றி என்று கூறினார். 

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்துக் காட்டினார்.  அதன் விவரம் வருமாறு:

  • மாநில முதல்வர்களுடன் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும். 
  • புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்
  • அனைத்து மாநில மொழிகள் வளர்ச்சிக்கு சம நிதி வழங்கப்படும். 
  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். 
  • புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். 
  • நாடு முழுவதும் காலை உணவு திட்டம் செயல்படும். 
  • தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
  • வங்கிகளில் குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத போது வைக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். 
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது. 
  • எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும்.
  • ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும். 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும். 
  • ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். 
  • சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும். 
Tags :
candidate listCMO TamilNaduDMKdmk manifestoElection2024loksabha election 2024manifestoMK StalinNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article