For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

07:36 AM May 01, 2024 IST | Web Editor
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு
Advertisement

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாட்டில் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என்று 2 வகையான சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோவுடனும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 19 கிலோவுடனும் விறபனை செய்யப்பட்டு வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசலை போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : மும்பை அணிக்கு எதிரான போட்டி – லக்னோ அணி அசத்தல் வெற்றி!

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாகவே சிலிண்டரின் விலையை படிப்படியாக குறைத்து வருகின்றன.அந்த வகையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து உள்ளன. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19  குறைந்துள்ளது.  இதன்மூலம் ரூ.1,930க்கு விற்பனையான வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,911க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி 818 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement