உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி | #Karnataka -வில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு!
கர்நாடகாவில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வடமாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகமாக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : அரசு மருத்துவமனைகளில் போலி #Antibiotic | டால்கம் பவுடர் நிரப்பப்பட்ட மாத்திரைகளால் நோயாளிகள் அதிர்ச்சி!
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மதிய வங்காள விரிகுடா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் நகர வாய்ப்புள்ளது. இதையடுத்து, இன்று கர்நாடகாவில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வடக்கு உள் கர்நாடகாவில் கன முதல் மிக கனமழையும் மற்றும் கேரளா, மாஹே, ஆந்திர கடற்கரை ஓரப்பகுதிகள், தியானம் ராயல் சீமா தெலுங்கானா தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது"
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.