Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை அரபிக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... #IMD எச்சரிக்கை!

02:08 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

நாளை அரபிக் கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதா இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த மூன்று நாட்களில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
arabian seaLow pressure zoneThe low-pressure Area
Advertisement
Next Article