For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. 1 கிராம் ரூ.6,385-க்கு விற்பனை!

10:04 AM Jul 30, 2024 IST | Web Editor
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை   1 கிராம் ரூ 6 385 க்கு விற்பனை
Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதனிடையே கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான  சுங்கவரி குறைப்பை அறிவித்தார்.

இதன் எதிரொலியாக கிட்டதட்ட ரூ.4000 வரை தங்கம் விலை சரிந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.51,080க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.51,320க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் ரூ.6,415க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6385 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.89க்கு விற்பனையாகிறது.

Tags :
Advertisement