Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக எம்எல்ஏவிடம் ஓயோ அறை கேட்கும் காதலர்கள்! - வைரலாகும் வீடியோ!

07:01 PM Apr 24, 2024 IST | Web Editor
Advertisement

பூங்காவில் அமர்ந்திருந்த காதலர்களிடம் பாஜக எம்எல்ஏ ஒருவர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் வைஷாலி நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ரிகேஷ் சென். இவருக்கு நேரு நகரில் உள்ள ஒரு பூங்காவில் காதலர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் அங்கு நடைபயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகவும் புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து அவர் அந்த பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அங்குள்ள காதலர்களுடன் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இங்கு என்ன செய்கிறீர்கள் என அங்கு அமர்ந்திருந்த காதலர்களிடம் கேட்கிறார். அதற்கு, நாங்கள் நேரம் செலவழிக்கவும், தனியாக சந்தித்து பேசவும் தான் வந்தோம் என தெரிவித்தனர். மேலும், நீங்கள்தான் ஓயோவை மூடி விட்டீர்கள். தற்போது சந்திக்க ஒரே இடம் பூங்கா மட்டுமே உள்ளது” என தெரிவித்தனர்.

மற்றொருவர், எல்லாவற்றையும் மூடிவிட்டீர்கள். குறைந்தபட்சம் ஒன்றையாவது திறக்கலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, “பூங்காக்கள் குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளத்தானே தவிர இதுபோன்ற ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக அல்ல” என தெரிவித்துள்ளார். மேலும்,  இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க ‘லைலா மஜ்னு’ பிரிவு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோவிற்கு பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Tags :
BJPChhattisgarhMLAPark
Advertisement
Next Article