‘Lovely Runner’, ‘Queen of Tears’ வெளியாகும் K-டிராமா தளங்கள் "ஹேக்"!
பிரபலமான தென்கொரிய தொலைக்காட்சி சேனல் tvN மற்றும் அதன் ஸ்ட்ரீமிங் தளமான TVING ஆகியவை ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் YouTube சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன.
பிரபலமான தென் கொரிய தொலைக்காட்சி நிறுவனமான, tvN மற்றும் சேனலுடன் தொடர்புடைய ஸ்ட்ரீமிங் தளமான TVING, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் Queen of Tears மற்றும் Lovely Runner ஆகிய இரண்டு கே-டிராமாக்களை வெளியிட்டன. இதில் Queen of Tears தென் கொரிய தொலைக்காட்சி தொடர்களில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்தத் தொடரை பார்க் ஜி-யூன் எழுதினார், மேலும் ஜாங் யங்-வூ மற்றும் கிம் ஹீ-வோன் இணைந்து இயக்கியுள்ளனர்.
லவ்லி ரன்னர் என்பது யூன் ஜாங்-ஹோ மற்றும் கிம் டே-யோப் இயக்கிய பிரபலமான தென் கொரிய தொலைக்காட்சித் தொடர். இந்தத் தொடர் டுமாரோஸ் பெஸ்ட் என்ற தலைப்பில் உள்ள நாவலை அடிப்படையாகக் கொண்டது. 8 ஏப்ரல் 2024 முதல் 28 மே 2024 வரை, இந்தத் தொடர் tvN சேனலில் ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையும் 20:50 (KST) மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த 2 தொடர்கள் உள்ளிட்ட பிரபலமான கொரிய நிகழ்ச்சிகளின் அனைத்து அதிகாரப்பூர்வ வீடியோக்களும் ஹேக் செய்யப்பட்டு பின்னர் யூடியூப்பில் டெலிட் செய்யப்பட்டுள்ளன. இந்த செய்தி இணையத்தில் வெளியானதில் இருந்து வைரலாக பரவி வருகிறது. TVING மற்றும் tvN இரண்டு சேனல்களும் ஆரம்பத்தில் 'ரிப்பிள்' என மறுபெயரிடப்பட்டிருந்தன.
안녕하세요, tvN 입니다.
2024년 7월 20일(토) 새벽 tvN DRAMA 유튜브 채널이
외부 해킹 공격으로 인해 채널명이 변경되고,
관련 없는 콘텐츠가 업로드 되는 사건이 발생하였습니다.유튜브 측 협조를 통해 현재는 기존 영상 복구를 비롯
채널 리스트 모두 정상화 되었습니다.감사합니다. pic.twitter.com/4qPZYh5VbU
— tvN drama (@CJnDrama) July 20, 2024
TVING என்பது பிரபலமான தென் கொரிய சந்தா ஸ்ட்ரீமிங் சேவையாகும். இது விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நாடகங்கள், ஆவிகள், பிரத்யேக தொலைக்காட்சி திரைப்படங்கள், சிறப்புகள் மற்றும் ஆவணப்படங்களை ஸ்ட்ரீம் செய்யும் தளமாகும். இந்த இயங்குதளம் 31 மே 2010 இல் நிறுவப்பட்டது.
안녕하세요, 티빙입니다.
2024년 7월 20일 (토) TVING 유튜브 채널이 외부 해킹 공격으로 인해 채널명이 변경되었던 이슈는 현재 유튜브 측 협조를 통해 TVING 채널 복구가 완료되어 정상화되었음을 안내드립니다.
놀라셨을 구독자 분들께
이용에 불편을 드린 점 사과와 양해의 말씀드립니다. pic.twitter.com/WaQIppeNZp— TVING 티빙 (@tvingdotcom) July 20, 2024
YouTube இல் TVING சேனலில் 985K சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. அதேபோல், TvN சேனல் 7.11 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. தற்போது Youtube நிறுவனத்தின் மூலம் தங்கள் சேனலை மீட்டெடுக்கும் பணியில் TVING நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான வீடியோக்கள் அல்லது இணைப்புகளைக் கொண்ட லிங்குகளை கிளிக் செய்யாமல் கவனமாக இருக்குமாறு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. tvN என்பது CJ ENM என்டர்டெயின்மென்ட் பிரிவிற்குச் சொந்தமான பிரபலமான தென் கொரிய தேசிய கட்டண தொலைக்காட்சி நெட்வொர்க் ஆகும்.