கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைவருக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆனால் மணிப்பால் ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸில் முதுகலை பயிலும் 21 வயதான டொமினிக் பிண்டோவுக்கு இது சற்று வித்தியாசமான மகிழ்வை வழங்கக்கூடிய பண்டிகையாக உள்ளது. இது குறித்த விவரங்களை இந்த சிறப்பு தொகுப்பில் காணாலாம்..
கிறிஸ்துமஸ் பண்டிகையை நிச்சயம் புனேவில் உள்ள தனது வீட்டில் கொண்டாடுவதையே டொமின்க் பிண்டோ வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம், டொமினிக்கின் தாய் வீணா பிண்டோவும், அவரது கிறிஸ்துமஸ் அலங்காரங்களும் தான்!
வீணா பிண்டோ கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் பெரும் ஆர்வம் கொண்டவர். இதற்காக டெல்லி முதல் அமெரிக்கா வரை சென்று பல அலங்கார பொருட்களை வாங்கக்கூடியவர். அவர்களது இல்லம் முழுவதும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் அலங்கரிக்கப்படுகிறது. விட்டின் அறைகளில் உள்ள ஒவ்வொரு மேசை மற்றும் குஷன் கவர்களில் கூட கிறிஸ்துமஸ் கருப்பொருள்கள் கொண்டே அலங்கரிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மீதான தனது தாயின் காதல், தட்டுகள், பிஸ்கெட் ஜாடிகள், குவளைகள் போன்ற பல்வேறு வகையான பாத்திரங்களில் கூட வெளிப்படும் என டொமினிக் கூறுகிறார். மேலும் தனது வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அலங்கரிக்கப்பட்டு, அதை ஒரு அதிசய பூமியாக மாற்றும்போதே, உண்மையான மேஜிக் நடப்பதாக டொமினிக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.