Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அன்புக்கரசு, உன் அன்புக்கு கட்டுப்படுவேன்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

அமைச்சர் தங்கம் தென்னரசிடம், அன்புக்கரசு என்ற சிறுவன் எங்கள் ஊரில் பஸ் வரவில்லை என சொன்னவுடன் ”நான் உன்னுடைய அன்புக்கு கட்டுப்படுவேன்” என கலகலப்பாக பேசினார்.
02:13 PM Jan 30, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
வளாகத்தில் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிக்களுக்கு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், அவர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Advertisement

அப்போது மாணவர்களிடம் கலந்து உரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு
மாணவர்களின் பெயர், ஊர், என்ன படிக்கிறீங்க என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஆத்திகுளத்தில் இருந்து நடந்து பள்ளிக்கு வருகிறாயா, ரொம்ப சிரமமாக உள்ளதா" என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அமைச்சரை சந்தித்த சிறுவன், "நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன், பஸ் வரல" என்று அமைச்சரிடம் தெரிவித்தான். சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த சிறுவனின் பெயரை கேட்டார். அன்புக்கரசு என்று சொன்னவுடன் ”உன்னுடைய அன்புக்கு கட்டுப்படுவேன். உங்க ஊருக்கு முதல் பஸ் விட்டு உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்" என்று கலகலப்பாக பேசினார்.

பின்னர் நேரடியாக தைரியமாக வந்து பேசியதற்கு வாழ்த்து தெரிவித்து சிறுவனின் தோளில் கை போட்டவாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சிறிது தூரம் நடந்து சென்றார். தொடர்ந்து, சிறுவனிடம் "நன்றாக படிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

Tags :
Thangam ThenarasuVirudhunagar
Advertisement