லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்வு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ஆம் தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. பலந்த காற்றால் இந்த காட்டுத் தீ மளமளவென அங்குள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 7,500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் தற்போதுவரை சுமார் 12 ஆயிரம் பேரின் வீடுகள் கருகியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 15 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
வரவிருக்கும் நாட்களில் வானிலை இன்னும் மோசமாக இருக்கும் என்பதால் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.