சுப்பிரமணியசாமி கோயிலில் வெள்ளித்தேரில் எழுந்தருளினார் முருகன்!
கோயில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி மாத இரண்டாம் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு முருகப்பெருமானுக்கும்
வள்ளி, தெய்வயானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து முருகப்பெருமானுக்கு கிரீடம் தரித்து பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் சிவ வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்தார்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா கோஷத்துடன் வெள்ளி தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.