”உங்களின் அடுத்த சாகசத்தை எதிர்நோக்குகிறோம்” : அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் குமார் நடிப்பு மட்டுமின்றி ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்டவர். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இதனிடையே, ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த பதிவை பகிர்ந்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ”ஸ்பெயின், வேகம் மற்றும் ஸ்டைல் ஒரு சக்திவாய்ந்த காம்போ. டிராக்கில் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, அஜித் குமார். உங்கள் அடுத்த சாகசத்தை எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.