Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Look Back 2024 | கோட் முதல் அமரன் வரை... இந்த ஆண்டு வசூலை அள்ளிக் குவித்த திரைப்படங்கள்!

12:41 PM Dec 22, 2024 IST | Web Editor
Advertisement

2024ம் ஆண்டு வசூலை அள்ளிக்குவித்த தமிழ் திரைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisement

இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு வசூலை அள்ளிக்குவித்த தமிழ் திரைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியதன 'கோட்' திரைப்படம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 460 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அமரன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இத்திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனுக்கு உச்ச நட்சத்திர அந்தஸ்தையும் இந்த படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வேட்டையன்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.280 கோடி வரை வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது.

மகாராஜா

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் மகாராஜா. சீனா வசூலையும் சேர்த்து தற்போது வரை இப்படம் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சீனாவில் இந்த படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இதன் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ராயன்

தனுஷ் இயக்கி நடித்த படம் ராயன். ரசிகர்களை கவர்ந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இந்தியன் 2

ஷங்கர், கமல் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இப்படம் உலக அளவில் 155 கோடி ரூபாய் வசூல் செய்தது.

அரண்மனை 4

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் அரண்மனை 4. இப்படம் 110 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்றது.

கங்குவா

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் 106 கோடி ரூபாய் வசூல் செய்தது.

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும், இப்படம் உலக அளவில் 104 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

தங்கலான்

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற படம் தங்கலான். இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.

Advertisement
Next Article