Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Look Back 2024 | இந்த ஆண்டில் உயிரிழந்த சினிமா பிரபலங்கள்! 

07:54 PM Dec 26, 2024 IST | Web Editor
Advertisement

2024-ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த ஆண்டில் மறைந்த பிரபலங்களை பார்க்கலாம்.

Advertisement

இன்னும் ஒரு சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்தாண்டு பல பிரபலங்கள் உயியிரழந்துள்ளனர். அவை குறித்து விரிவாக காணலாம்.

பிப்ரவரி

நடிகர் அடடே மனோகர்

சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அடடே மனோகர். இவர் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, ரயில் சினேகிதம் உட்பட பல சீரியல்களில் நடித்திருந்தார். இவர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி காலமானார்.

மார்ச்

நடிகர் சேஷு

தனியார் தொலைக்காட்சியின் கமோடி ஷோ மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சேஷு. இவர் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, குளுகுளு உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். கடைசியாக நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் நடித்திருந்தார். நடிகர் சேஷு உடல்நிலை குறைவு காரணமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.

நடிகர் டேனியல் பாலாஜி

பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. நெஞ்சுவலி காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 30ஆம் தேதி காலமானார்.

ஏப்ரல்

நடிகர் விஸ்வேஸ்வர ராவ்

பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் விஸ்வேஸ்வர ராவ். இவர் உடல்நிலை குறைவால் கடந்த ஏப்ரல் 2ம் தேதி காலமானார். இவர் சுமார் 350 படங்களில் நடித்திருக்கிறார். அதில் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

நடிகர் செவ்வாழை ராசு

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் செவ்வாழை ராசு. இப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர் தனது 70 வயதில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

ஜூன்

நடிகர் பிரதீப் கே. விஜயன்

தெகிடி, டெடி, லிப்ட் போன்ற பல படங்களில் நடித்தவர் பிரதீப் விஜயன். இவர் பல படங்களில் நகைச்சுவை கேரக்டரிலும், வில்லனாகவும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அவர் கடந்த ஜூன் 13ஆம் தேதி காலமானார்.

ஆகஸ்ட்

நடிகர் பிஜிலி ரமேஷ்

யூடியூப் சேனலில் மூலம் பிரபலமடைந்து பின்னர் சினிமாவில் கால்தடம் பதித்தவர் பிஜிலி ரமேஷ். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நவம்பர்

நடிகர் டெல்லி கணேஷ்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக நாடக நடிகராக இருந்தார். டெல்லி கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பல வருடங்களாக நடித்து வந்த நடிகர் டெல்லி கணேஷ் சீரியல்களிலும் நடித்திருந்தார். அவர் 80 வயதில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி காலமானார்.

இயக்குநர் சுரேஷ் சங்கையா

‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இதனையடுத்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா கடந்த நவ.15ம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டிசம்பர்

நடிகர் நேத்ரன்

சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நேத்ரன் (47). சின்னத்திரையை பொருத்தமட்டில் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த நடிகராக பயணித்து வந்தார். நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலமானார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன்

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் கோதண்டராமன்.கோதண்டராமன் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தார்.இவர் பகவதி, திருப்பதி, கிரீடம், சிங்கம், வேதாளம் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் ‘கலகலப்பு’ திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிக்கும் படி அமைந்திருந்தது. இந்நிலையில், இவர் கடந்த டிச.19ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Tags :
CelebrityFlash BackFlash Back 2024Look Back 2024New Year 2024news7 tamilYear End
Advertisement
Next Article