#LookBack2024 | இந்த ஆண்டில் சிறந்த தமிழ் வெப் தொடர்கள்! #Top10
இந்த ஆண்டில் ஓடிடியில் வந்த சிறந்த தமிழ் வெப் தொடர்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா, பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டில் ஓடிடியில் வெளியாகியுள்ள சிறந்த தமிழ் வெப் தொடர்களை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
ஜர்னி
ஜர்னியை சேரன் இயக்கியுள்ளார். இத்தொடரில் ஜாஸ்மின், சரத்குமார், அஞ்சு குரியன், கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். வெவ்வேறு பின்னணிகளை கொண்ட 5 கதாபாத்திரங்கள் ஒரு வேலைக்காக போட்டியிடுகின்றனர். இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் மொத்தம் 9 எபிசோடுகள் உள்ளது. இத்தொடர் SONY LIVE ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட்
ஹார்ட் பீட் தொடர் ஆர் கே மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களின் வாழ்க்கை பிரச்னை பற்றி எடுக்கப்பட்டது. அனுமோல், தீபா பாலு, சாருகேஷ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இத்தொடரில் மொத்தம் 72 எபிச்சோடுகள் உள்ளன. இத்தொடர் HOTSTAR யில் வெளியாகியுள்ளது.
இன்ஸ்பெக்டர் ரிஷி
இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார். இத்தொடரில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ணா தயால். கன்னா ரவி, மாலினி ஜீவரத்னம், சுனைனா, குமரன் ஹரினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய மலைகிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்ம இறப்புகளை மையமாக வைத்து இயக்கிய தொடராகும். இத்தொடரில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளன. இத்தொடர் AMAZON PRIME ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தலைமை செயலகம்
தலைமை செயலகம் , தமிழ் அரசியல்-திரில்லர் வலைத் தொடராகும், இத்தொடரை வசந்தபாலன் இயக்கியள்ளார், இதில் கிஷோர் மற்றும் ஸ்ரீயா ரெட்டி நடித்துள்ளனர். இது முதல்வர் அருணாசலத்தை பின்பற்றுகிறது, இந்தத் தொடர் அரசியல், துரோகம் மற்றும் தார்மீக சங்கடங்கள் ஆகியவற்றின் எடுத்து காட்டுகிறது. இந்த தொடர் ZEE5 இல் வெளியாகியது.
உப்பு புளி காரம்
உப்பு புளி காரம் தொடரில் சுப்ரமணியாக பொன்வண்ணனும், சுப்பலட்சுமியாக வனிதா கிருஷ்ணச்சந்திரனும் நடித்துள்ளனர். நவீன் முரளிதர், ஆயிஷா ஜீனத், தீபிகா வெங்கடாசலம் மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவில் இந்தத் தொடரை விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இத்தொடர் DISNEY PLUS HOT STARயில் வெளியாகியது.
சட்னி சாம்பார்
சட்னி சாம்பார், ராதா மோகன் இயக்கிய நகைச்சுவை தொடராகும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இதில் யோகி பாபு, வாணி போஜன் மற்றும் சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் நிதின் சத்யா, இளங்கோ குமரவேல், கிரிஷ் ஹாசன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். ஆறு எபிசொட் கொண்ட இந்தத் தொடர், DISNEY HOTSTAR யில் வெளியானது.
மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்
மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் குடும்ப நாடகத் தொடராகும், இதில் சத்யராஜ் , சீதா , ஜே. லிவிங்ஸ்டன், ரேகா ஹாரிஸ், ரேஷ்மா பசுப்புலேட்டி, ரக்ஷன், வர்ஷா பொல்லம்மா மற்றும் அஜீத் காலிக் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரின் கதை ஒரு முழுமையான, நிறைவற்ற கணவரை மையமாகக் கொண்டது. இத்தொடர் மொத்தம் எட்டு எபிசோடுகள் கொண்டது. இந்தத் தொடர், DISNEY HOTSTAR யில் வெளியானது.
கோலி சோடா ரைசிங்
கோலி சோடா ரைசிங் விஜய் மில்டன் மற்றும் பி. ஜெயமோகன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதில் கிஷோர் டிஎஸ், முருகேஷ், பாண்டி மற்றும் சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரதில் நடித்தனர். உதயராஜ், ஸ்வேதா, சேரன் , ஷாம் , புகழ் , சுஜாதா சிவக்குமார் , அபிராமி கோபிகுமார் , ரம்யா நம்பீசன் , அம்மு அபிராமி , மதுசூதன் ராவ் , ஜான் விஜய் , இம்மான் அண்ணாச்சி , பரத் சீனிஉள்ளிட்ட பிற நடிகர்கள் நடித்துள்ளனர். இத்தொடர் DISNEY PLUS HOT STARயில் வெளியாகியது.
தலைவெட்டியான் பாளையம்
தலைவெட்டியான் பாளையம், நகைச்சுவை தொடராகும், இது இந்தி நிகழ்ச்சியான பஞ்சாயத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். பாலகுமாரன் முருகேசன் எழுதி, நாகா இயக்கிய, இது ஒரு கிராமப்புற கிராமத்தின் செயலாளராகப் பதவியேற்ற நகர இளைஞனின் கதையைப் பின்பற்றுகிறது. அதன் முதல் சீசனில் 8 எபிசோட்களுடன் அவரது நகைச்சுவையான மற்றும் நுண்ணறிவுப் பயணத்தை இது காட்டுகிறது. இத்தொடர் AMAZON PRIME யில் வெளியாகியது.
சினேக் அண்ட் லாட்டர்
சினேக் அண்ட் லாட்டர் தொடரில் சிறுவர்களின் நடிப்பு மற்றும் அவர்களின் தந்தையுடனான அவர்களின் உறவுகளைப் பற்றிய துணைக் கதைகள் குறிப்பிடத்தக்கவை. பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கெமிஸ் இவர்களால் இயக்கப்பட்டது. எம்எஸ் சம்ரித், எஸ் சூர்யா ராகவேஷ்வர், எஸ் சூர்யா குமார், தருண் யுவராஜ், சாஷா பரேன், நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா ஆகியவர் நடித்திருந்தனர். இத்தொடர் 9 எபிசொட் கொண்டது.