"தமிழ்நாடு வாழ்க" - வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று கடந்த 1967- ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில், முன்னாள் முதலமைச்சர் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவில் பேசிய காணொலியை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பதிவில் இடம் பெற்றுள்ளதாவது:
“தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் என்பதை விட இந்த பெயரை பெற்றிருப்பது என்று தான் சொல்ல வேண்டும். மாற்றப்பட்ட பெயரை நாம் திரும்ப பெற்றிருக்கிறோம். இந்த அரசு வந்தபிறகு தான் இந்த பெயர் பெறப்பட வேண்டும் என்று வரலாற்றில் இருந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்” இவ்வாறு அண்ணா தெரிவித்திருப்பார்.
இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!
தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் :
“கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!#வாழ்க_தமிழ்நாடு! pic.twitter.com/fLZt5L3HhL— M.K.Stalin (@mkstalin) July 18, 2024