For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஜினியின் 'கூலி' திரைப்படத்தில் இணைந்த விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்பட நடிகர்!

04:41 PM Jul 07, 2024 IST | Web Editor
ரஜினியின்  கூலி  திரைப்படத்தில் இணைந்த விஜய்யின்  மாஸ்டர்  திரைப்பட நடிகர்
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மகேந்திரன் நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

Advertisement

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்  : “திமுக அரசின் நிலைப்பாடு அடுத்த தேர்தலை நோக்கி தான் உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த மகேந்திரன் இணைந்துள்ளது தகவல் தெரியவந்துள்ளது. 'மாஸ்டர்' திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தார். தற்போது, 'கூலி' திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.

Tags :
Advertisement