For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லோகேஷ் கனகராஜின் ‘LCU' குறும்படம் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

04:39 PM Dec 17, 2023 IST | Web Editor
லோகேஷ் கனகராஜின் ‘lcu  குறும்படம்   விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

லியோ திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த உடனேயே தனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ள அவருடைய 171 வது திரைப்படத்திற்கான கதையை எழுதி வருகிறார். விரைவில் அந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான அவருடைய LCU படங்களை ஒன்றிணைத்து ஒரு குறும்படத்தை அவர் வெளியிட உள்ளதாக சில தகவல்கள் வெளியானது.

ஆனால் பலரும் இதை பொய்யான தகவல் என்று கூறிய நிலையில், அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தனது நண்பர் விஜயகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள "ஃபைட் கிளப்" படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வெளியிட்ட தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். 

அவர் அந்த பேட்டியில் கூறிய தகவலின்படி லியோ திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த உடனேயே தனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். இது எனது LCU திரைப்படங்களை ஒன்றிணைக்கும் ஒரு குறும்படம் தான், இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த குறும்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் ஆழ்த்தி உள்ளார்.

இந்த குறும்படத்தில் விக்ரம், ரோலக்ஸ், டெல்லி மற்றும் லியோ தாஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement