For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லோகேஷ் கனகராஜின் ’கூலி’ பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம் - இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்!

03:12 PM Apr 29, 2024 IST | Web Editor
லோகேஷ் கனகராஜின் ’கூலி’ பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம்   இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்
Advertisement

லோகேஷ் கனகராஜின் கூலி பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம் செய்த வீடியோவை பகிர்ந்த  நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

நடிகர் விஜய்,  தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,  பிரபுதேவா,  மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.  இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கடந்தாண்டு மே மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அக்டோபர் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு துவங்கியது.  இதையடுத்து தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்க உள்ளது.  அநேகமாக மே முதல் வாரத்தில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.  யுவனின் இசையில் விஜய்யின் குரலில் வெளியான விசில் போடு என்ற அப்பாடல் கலவையான விமர்சனங்களை பெற்று விஜய் ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது.  இந்த சாதனையை பற்றி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த வெங்கட் பிரபு  இந்த சாதனை தளபதியால் மட்டுமே சாத்தியமானது என அவர் பதிவிட்டிருந்தார்.  இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் GOAT அப்டேட் இருக்கா என கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு  `GOAT’ படத்தின் அடுத்த சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும்  தெரிவித்திருந்தார்.  மேலும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று வெங்கட் பிரபுவின் கேங்கில் அறிமுகமான நடிகரான கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விமர்சனத்தை முன்வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஒரே மாதிரியான காட்சிகள், வசனங்கள், இசை என எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றது என தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார்.

https://x.com/LetsXOtt/status/1784493185248706603

கார்த்திக் பேசிய வீடியோவின்படி சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தின் ட்ரெய்லரைத்தான் குறிப்பிடுகிறார் என பலர் விமர்சனம் செய்த நிலையில் வெங்கட் பிரபு இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக பலர் பகிர்ந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குநர் பிரபு தெரிவித்துள்ளதாவது...

“ அந்த வீடியோவில் அனைத்து கமர்ஷியல் படங்களின் ட்ரெய்லர்களையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர் கூறுவது உண்மையும் கூட. வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் இருந்து வித்தியாசமாக ட்ரெய்லரை கொடுக்க முயற்சித்தால்  ரசிகர்கள் நிச்சயமாக ஏற்க தயாராக உள்ளனர்” என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement