ஹீரோவான லோகேஷ் கனகராஜ்; கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' என்ற பாடலின் டீஸர் நாளை வெளியாகிறது.
கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. அதில், ‘இனிமேல் டெலுலு இஸ் தி நியூ சொலுலு’ என்று கேப்ஷன் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான அர்த்தம் விளங்காமல் ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.
லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171 வது படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் சலார் திரைப்படம் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றிணையும் படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறதா என்பதே, போஸ்டரைப் பார்த்ததும் அனைவருக்கும் எழுந்த கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில், இசையின் மேல் ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன், எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற இண்டிபெண்டெண்ட் ஆல்பங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் அவர் லோகேஷ் கனகராஜை வைத்து ‘இனிமேல்’ என்ற ஆல்பம் ஒன்றை இயக்கவுள்ளார். அந்த பாடலுக்கான வரிகளை கமல் ஹாசன் எழுதியுள்ளார்.
துவர்கேஷ் இந்த இசை ஆல்பத்தின் வீடியோவை இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆல்பத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த பாடலின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளாது.