For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆர்.ஜே.பாலாஜி ஹீராவாக நடிக்கும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்!

12:52 PM Nov 14, 2023 IST | Web Editor
ஆர் ஜே பாலாஜி ஹீராவாக நடிக்கும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்
Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,  நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு ரோலில் நடிக்கவிருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.  விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களுமே ஆக்ஷன் ஓரியண்டட் படங்களாக இருக்கும். இவரின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவு கிடைத்து வருகிறது. தொடர்ந்து படங்களை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குகிறார். மேலும் சூப்பர்ஸ்டாரின் 171வது படம் LCUவில் இணையாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த அடுத்த சில படங்களை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் தான் ’சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி மெயின் ரோலில் நடிக்கிறார், மேலும் அவருக்கு ஜோடியாக சிவானி ராஜசேகர் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் கோகுல் கூறியுள்ளார். ஹீரோவின் சலூனுக்கு முடி திருத்தம் செய்ய வரும் பிரபலமாக லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார். மேலும், மாநகரம் படத்தின் போதே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் கோகுல் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags :
Advertisement