Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு... வாக்குப்பதிவை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

08:47 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் நாளை தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி மக்களின் வசதிக்காக போக்குவரத்து துறையும், ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை வெள்ளிக் கிழமை அட்டவணை அல்லாமல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

‘நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Election2024MetroMetro TrainsParlimentary Election
Advertisement
Next Article