மக்களவை தேர்தல் - தேமுதிக விருப்பமனு குறித்த தேதி அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு வரும் 19 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவைப் பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வரும் 19 ஆம் தேதி காலை 11 மணிமுதல் தேமுதிக தலைமைக் கழகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விருப்ப மனு பெற்றவர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மார்.20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் எனவும் தேதிமுக அறிவித்துள்ளது.
மேலும் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் மார்.21 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக் கழகத்தில் நடைபெறும் எனவும் கட்சியின் தலைவர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.