For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்!

12:34 PM Jun 05, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தல் 2024  தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்
Advertisement

நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்கள் பற்றிய தொகுப்பை காணலாம். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஐந்து வேட்பாளர்கள் பின்வருமாறு.

1. சசிகாந்த் செந்தில் - திருவள்ளூர் :

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொன்.வி.பாலகணபதியை  (பாஜக) 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  இதன் மூலம்,  தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற முதல் வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் சசிகாந்த் செந்தில்.

2.  டி.ஆர்.பாலு - ஸ்ரீபெரும்புதூர் :

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரேம்குமாரை  (அதிமுக) 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  இதன் மூலம், தமிழ்நாட்டில் இரண்டாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் டி.ஆர்.பாலு.

3. சச்சிதானந்தம் - திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட முகமது முபாரக்  (எஸ்.டி.பி.ஐ.) 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  இதன் மூலம், தமிழ்நாட்டில் மூன்றாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் சச்சிதானந்தம்.

4. கனிமொழி கருணாநிதி - தூத்துக்குடி

நாடாளுமன்றத்தில் தமிழுக்காக கர்ஜித்த கனிமொழி கருணாநிதி - News7 Tamil

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசாமி வேலுமணியை  (அதிமுக) 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  இதன் மூலம், தமிழ்நாட்டில் நான்காவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் கனிமொழி கருணாநிதி.

5. அருண் நேரு - பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட அருண் நேரு (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சந்திரமோகன் (அதிமுக) 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம்,  தமிழ்நாட்டில் ஐந்தாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் அருண் நேரு.

Tags :
Advertisement