17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது சிவசேனா (உத்தவ்) கட்சி!
2024 மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை சிவசேனா (உத்தவ்) வெளியிட்டுள்ளது.
சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத் மொத்தம் 17 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில், மும்பை தெற்கு மத்திய தொகுதியில் அனில் தேசாய் போட்டியிடுகிறார். UBT காங்கிரஸ் மற்றும் NCP (சரத் பவார்) உடன் கூட்டணி வைத்து சிவசேனா தேர்தலில் போட்டியிட உள்ளது.
என்சிபி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. MVA கூட்டாளிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், NCP (SP) தலைவர் சரத் பவார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற இடங்களைப் பொறுத்தவரை, இது உத்தரப் பிரதேசத்திற்கு (தொகுதிகள் 80) அடுத்த இரண்டாவது பெரிய மாநிலமாகும்.
हिंदूहृदयसम्राट शिवसेनाप्रमुख बाळासाहेब ठाकरे यांच्या आशीर्वादाने आणि शिवसेना पक्ष प्रमुख श्री.उद्धवजी ठाकरे यांच्या आदेशाने शिवसेनेच्या 17 लोकसभा उमेदवारांची यादी जाहीर करण्यास येत आहे..
*मुंबई दक्षिण मध्य:श्री अनिल देसाई यांच्या उमेदवारीची घोषणा करण्यात येत आहे.
इतर 16 उमेदवार… pic.twitter.com/nPg2RHimSF— Sanjay Raut (@rautsanjay61) March 27, 2024
சிவசேனா (UBT) வேட்பாளர்களின் முதல் பட்டியல்:
புல்தானா- நரேந்திர கேத்கர்,
மும்பை தெற்கு - அரவிந்த் சாவந்த்,
பர்பானி- சஞ்சய் ஜாதவ்,
யாவத்மால் வாஷிம் - சஞ்சய் தேஷ்முக்,
சாங்லி - சந்திரஹர் பாட்டீல்,
ஹிங்கோலி - நாகேஷ் பாட்டீல்,
சம்பாஜி நகர் - சந்திரகர் கைரே,
ஷீரடி - பௌசாஹாப்.