மக்களவைத் தேர்தல் 2024 : திருப்பதியில் கொடுவரப்பட்ட கட்டுப்பாடுகள்- தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் கொடுவரப்படுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது.
இதையும் படியுங்கள் : ஐஸ்லாந்து | மீண்டும் வெடித்து சிதறி எரிமலை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக விஐபி தரிசனத்தில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படும். ஆனால், தப்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவின்படி, திருமலையில் தங்குதல் மற்றும் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் நேற்று (16.03.2024) முதல் ரத்து செய்யபட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை கடிதங்கள் மூலம் கோயிலில் தங்கும் வசதி கொடுக்கப்படும். ஆனால், இனி அந்த வசதி ஏற்படுத்தி தரப்படாது. இருப்பினும் உயர்அதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பொறுப்புக்கு ஏற்க சலுகைகள் அளிக்கப்படும். மாறாக பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதி கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.