மக்களவைத் தேர்தல் 2024: முறைகேடுகளை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த தினசரி அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் டெல்லியில் மக்களவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "வெவ்வேறு மாநிலங்களில் வித்தியாசமான பிரச்னைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். அளவுக்கு அதிகமாகப் பணப் புழக்கம் நடைபெறகிறதா என்பதை NPCI, GST போன்ற ஏஜென்சிகள் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும். மதுபானம், பணம், இலவசங்கள், போதைப்பொருள் ஆகியவற்றின் விநியோகத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.