For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

06:55 AM Mar 16, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
Advertisement

இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.

Advertisement

நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையம் 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே தொடங்கிவிட்டது. தற்போது, அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.

அதாவது, "இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அந்த சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement