சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய் சேதுபதி.
மக்களவை தேர்தல் 2024 | ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு அதிகாலையிலேயே பல்வேறு பிரபலங்கள் இன்று வாக்களித்தனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருந்த நிலையில், நடிகர் அஜித் குமார் 6.40 மணிக்கே சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். காலை 7 மணிக்கு முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாக்கை பதிவு செய்துள்ளார். “வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்துவதிக் மரியாதை, கௌரவம் இருக்கிறது. தயவு செஞ்சி எல்லாரும் ஓட்டு போட வேண்டும்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தனுஷ்
சென்னை டி.டி.கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் தனது வாக்கினை செலுத்தினார்.
சசிகுமார்
அதேபோல், நடிகரும் இயக்குநருமான சசிகுமார் மதுரை புதுதாமரைப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்தார்.
ராதிகா - சரத்குமார்
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா வாக்களித்தார். நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமாரும் அதே வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மோகன்
கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகனும் காலையிலேயே தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.
சிவகார்த்தி கேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலையிலேயே தனது மனைவியுடன் வாக்கு சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை சிவகார்த்தி கேயன் பதிவு செய்துள்ளார்.
வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் ஓட்டுப் போட்டார்.
கெளதம் கார்த்திக்
அதேபோல் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக், சென்னையில் வாக்களித்தார்.
தங்கர் பச்சான்
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்களித்தார்.
விஜய் சேதுபதி