For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் 2024 | 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு எப்படி?

10:44 AM Apr 19, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல் 2024   21 மாநிலங்களில் வாக்குப்பதிவு எப்படி
Advertisement

காலை 9 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காலை 9 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காலை 9 மணி வரை மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 15% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் ம.பி.யில் 14 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

21 மாநிலங்களில் 9 மணி வரை எவ்வளவு வாக்குப்பதிவு நடந்தது?

1. மேற்கு வங்கம்- 15.9%

2. மத்தியப் பிரதேசம்- 14.12%

3. திரிபுரா- 13.62%

4. மேகாலயா- 12.96%

5. உத்தரப் பிரதேசம்- 12.22%

6. சத்தீஸ்கர்- 12.02%

8. அஸ்ஸாம்- 11.15%

9. ராஜஸ்தான்- 91.15%

10. காஷ்மீர் -10.43%

11. உத்தரகண்ட்- 10.41%

12. மிசோரம்- 9.36%

13. பிஹார்- 9.23%

14. அந்தமான்- 8.64%

15. தமிழ்நாடு- 8.21%

16. நாகலந்த்- 7.79%

17. மணிப்பூர் -7.63 %

18. பூது-7.49 %

19. சிக்கிம்-6.63 %

20. லட்சத்தீவு-5.59 %

21. அருணாச்சலப் பிரதேசம்- 4.95%

Tags :
Advertisement