மக்களவை தேர்தல் 2024 | இன்று வெளியாகிறது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு மட்டும் போட்டியிடும் தொகுதிகள் பற்றி விவரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தேர்தல் குழுவினர், திமுக தேர்தல் குழுவினரை இன்று சந்திக்க உள்ளனர். மதியம் 12:30 மணிக்கு மேல் திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர். இன்றே காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.