தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
12:41 PM Apr 02, 2025 IST | Web Editor
Advertisement
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு வருகின்ற 7-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதாவது, வருகின்ற திங்கட்கிழமை ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் ஏராளமான பொதுமக்கள் சாமியை தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பதால் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல், பங்குனி உத்திர திருவிழாவான வருகின்ற 11-ஆம் தேதியும் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.