திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
12:14 PM Mar 31, 2025 IST | Web Editor
Advertisement
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. இந்தகைய சிறப்புமிக்க கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழா மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருவிழா ஆழி தேரோட்டம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஏப்ரல் 7-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறுநாள் (ஏப்ரல் 8-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.