Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை... வெளியான முக்கிய அறிவிப்பு!

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
02:37 PM Feb 24, 2025 IST | Web Editor
Advertisement

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

Advertisement

"கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 04.03.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2025 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 15.03.2025 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Ayya Vaikundarholidaylocal holidaynews7 tamilNews7 Tamil UpdatesTenkasi
Advertisement
Next Article