"கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்" - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,
"மத்திய அரசின் கிசான் அட்டை மூலமாக கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். அதன்படி, குறு நிறுவனங்களுக்கு கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும், கூட்டுறவுத் துறை, சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்கப்படும். நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு வசதியாக கடன் உத்தரவாத பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை கூடுதல் கடன் வழங்கப்படும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி கூடுதல் கடன் கிடைக்கும். சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடன் அனுமதி. தொடக்க நிறுவனங்களுக்கு, ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை, உத்தரவாதக் கட்டணம் 1% ஆகக் குறைக்கப்படுகிறது.
சிறு, குறு நிறுவனங்கள்தான் இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்கி வருகின்றன. கிசான் கிரெடிட் கார்டு மூலமாக 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை காலணிகள் உற்பத்தியைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் சலுகைகள் வழங்க ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது"
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.